ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி- அவரை திருத்தவே முடியாது




Pasumai Nayagan பசுமை நாயகன்


        இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation - Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ. அதில் சில பகுதிகள்... 

   இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. 

   இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

    நூலாசிரியர் கேட்ட சில கேள்விகளுக்கு லீ அளித்துள்ள பதில்கள்... இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மை யினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. 

   அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமை யோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். 

   அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்து கொண்டி ருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்த வரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும் தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர் களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ. இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். 

   இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ க்வான் யூ என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்களின் பட்டியல்


Pasumai Nayagan பசுமை நாயகன் www.thagavalthalam.com
      பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.
அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
மெலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.



                                         -பசுமை நாயகன்

சீரக‌ம் , ஏல‌க்கா‌ய், மருத்துவ குணங்கள்


பசுமை நாயகன் www.thagavalthalam.com


சீரக‌ம் 

பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை. 

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும். 

ஏல‌க்கா‌ய் 

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம். 

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம். 

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது. 

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள். 

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு. 

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

நாளைய இந்தியா வளர்ந்த நாடாக மாற்ற ஒரு செயல்திட்டம்

   
பசுமை நாயகன் Pasumai Nayagan thagavalthalam.com

   
   ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால், இந்தியாவோ 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஏழை நாடு. வெறும் ஏழைமை மட்டுமல்ல, ஏழைமைப்படுத்தப்பட்ட நாடு. நாட்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் சத்தான உணவுக்கு வழியற்றவர்கள். உலகிலேயே படிப்பறிவற்ற மக்களை அதிகபட்சமாகக் கொண்ட நாடு. மனிதவள மேம்பாடு சம்பந்தபட்ட பல அளவீடுகளில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. 

    ஒரு முன்னேறிய நாடாகக்கூடிய ஆற்றலை எப்போதுமே தன்வசம் கொண்டிருந்தும்கூட, தனது ஆற்றலை நிர்ணயிக்கும் நிலையை எட்டும் தொலைவில் கூட இந்தியா இருந்ததில்லை. அந்த நிலையை அடைந்திட வேண்டிய தருணம் இது. 

எது முன்னேற்றம்:

       முன்னேற்றம் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிடாது. எனினும், முன்னேற்றத்தின் ஆரம்ப நிலைகளில் பொருளாதார வளர்ச்சி அத்தியாவசியமான தொடர்பைக் கொண்டது. முன்னேற்றம் இல்லாமல் வெறும் பொருளாதார வளர்ச்சி அடைவது சாத்தியம். அதேபோல் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றம் அடைவதும் சாத்தியமே. ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகே முன்னேற்றம் என்பது சாத்தியம். 

      நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தை கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம் உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.

         ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.

நமக்கு ஏன் இந்த அக்கறை:



        நீங்ளோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? 

       இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களின் துயரத்தை மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.

     முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும் அடைவது நமக்கு மிக அவசியம்.

     ஏன் இந்தியா சுதந்தரம் பெற்று 70 வருடங்கள் ஆகியும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இல்லை? அதற்கு எவையெல்லாம் தடைகளாக இருந்தன, இருக்கின்றன? தடைகள் தானாக அமைந்தனவா அல்லது அமைக்கப்பட்டனவா? இந்தத் தடைகளை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 

தீர்வு காண்பது எப்படி?:

        ஒரு பிரச்னையைத் தீர்க்க ஒருமணி நேரமே உள்ளது; அதன் தீர்வில்தான் நான் உயிர்வாழ்வது அடங்கி உள்ளது எனும்போதும், முதல் 55 நிமிடங்களை முறையான கேள்வியைத் தீர்மானிப்பதில்தான் செலவிடுவேன். ஏனெனில், முறையானக் கேள்வியைத் தெரிந்து கொண்ட பின்னால் அந்தப் பிரச்னைக்கு ஐந்து நிமிடங்களுக்குள் என்னால் தீர்வு கண்டுவிட முடியும்.’ 

    இந்தியா ‘கூடிய விரைவில் ஒரு வல்லரசாகிவிடும்‘ அல்லது ‘இந்த தேசத்தையோ அல்லது அந்த தேசத்தையோ முந்தப்போகிறது‘, ‘தகவல் தொழில்நுட்ப வல்லரசு‘ போன்ற கோஷங்களை நாம் எப்போதும் கேட்டவண்ணம் இருக்கிறோம். கேட்பதற்குப் பெருமையாக இருந்தாலும் அவையாவும் நம்பமுடியாத வீண் பேச்சுகள்; சிறிய ஆய்வுகளை எதிர்கொள்வதற்குக்கூட இந்தக் கோஷங்கள் தகுதியற்றவை.

    இந்தியா பற்றிய புத்தகங்களை எழுதுவது குடிசைத் தொழில் அளவுக்கு மலிந்துவிட்டது. சிலர் இந்தியா எப்படி ஒரு உயர்ந்த நிலையை அடையப்போகிறது என்பது பற்றியும், சிலர் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், சிலர் செய்வதற்கு என்ன மீதம் உள்ளது என்பது பற்றியும் எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புத்தகமும் ‘ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?’ என்ற கேள்வியை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.

ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?:

          ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடை முக்கியமானது. ஏனெனில், அது பல கோடி மக்களின் வாழ்வாசாவா பிரச்னை சம்பந்தப்பட்டது. அந்தக் கேள்வி பின்வரும் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. 

      முதலில், இந்தியாவின் ஏழைமை என்பது தவிர்க்க இயலாமல் அமைந்தது அல்ல. இந்தியா செல்வச் செழிப்பான முன்னேறிய நாடாக ஆகியிருக்க முடியும். இரண்டு, இந்தியா ஏன் ஏழை நாடு என்பதற்குக் காரணங்கள் உண்டு. நாம் காரணங்களைப் புரிந்துகொள்ளும் பட்சத்தில் அவற்றைப் பற்றி ஏதேனும் செய்திட முடியும்.

     ஏன் இந்தக் கேள்வியை எவருமே கேட்பதில்லை? அப்படி ஒரு கேள்வி நாகரிகம் அற்றதாக ஆகிவிட்டதுதான் அதற்கான காரணம் என்பது என்னுடைய ஊகம். குறிப்பாக, அந்தக் கேள்விக்கான நேர்மையான பதில் கேட்பதற்கு இனிமையானதாக இல்லை. அந்த நேர்மையான பதில், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்ட, கருதப்படும் பல தலைவர்களின் பெருமைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடும். சுதந்திரத்துக்குப்பின் நாட்டை வழி நடத்தியவர்கள் மேதைகளோ, மிகச் சிறந்த அறிவாளிகளோ அல்ல என்பதை அம்பலப்படுத்திவிடும்; நாம் பெருமையாகக் கருதும் பல நம்பிக்கைகளைத் தவறு என்று அப்பட்டமாகச் சுட்டிக்காட்டிவிடும்.

திணிக்கப்பட ஏழ்மை:


         இந்தியா ஏழைமையைத் தேர்ந்தெடுத்த நாடு. ‘ஏழைகளாக வாழ்வோம்’ என்று மக்கள் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்ததாக அதை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. நாம் தேர்ந்தெடுத்த தேசத்தின் தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசமான பொதுநலத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அதன் விளைவாக இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் ஏழைமையைத் திணித்துள்ளனர். தவறான தலைவர்களும் அவர்களின் திட்டங்களும் காலப்போக்கில் பரவலான, கடுமையான ஏழைமை நிலைக்கு நாட்டைத் தள்ளியுள்ளது. பொருளாதாரத் திட்டங்களே ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி அமைகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. மோசமான, தவறான திட்டங்கள் பொலிவற்ற பொருளாதார நிலைமைக்கு வித்திடுகின்றன; நல்லத் திட்டங்கள் மட்டுமே வெற்றிக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வித்திடும். இந்த உண்மையை நாம் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும். 

    ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடையைத் தேடும்போதுதான், நாம் வெகுவாகக் கொண்டாடும் தேசத் தலைவர்கள் என்ன மாதிரியான தவறுகளைத் திரும்பத் திரும்ப இழைத்துள்ளனர் என்பது வெளிப்படும். தவறுகளைச் சுட்டிக் காட்டுவது பதவியிலும் பலத்திலும் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. நாட்டின் சிற்பிகளாக நம்மால் கருதப்படும் தலைவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக இருந்துள்ளனர் என்பதைக் கூறுவது பாதுகாப்பான செயலே அல்ல. 

யார் காரணம்?:


இந்தியா முன்னேறத் தவறியதற்கு இந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகளைக் குற்றஞ்சாட்டுவது தவிர்க்க இயலாதது. 

நான் பொருளாதாரம் படித்தவன். ஆகவே, என்னுடைய பார்வை ஒரு வரலாற்றாசிரியர் போலவோ, அரசியல் விஞ்ஞானியைப் போலவோ இல்லாமல் வேறுபட்டே இருக்கப்போகிறது. 

நமது பெற்றோர்களும் பாட்டன்மார்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்காகப் போராடியவர்கள். நமக்குப் பின்வரும் தலைமுறை அவலநிலைகளைக் காண்பதை நாம் விரும்பமாட்டோம். நாம்தான் இந்தியாவின் மாறுபாட்டை உருவாக்கியவர்களாக இருக்க வேண்டும். அதை இப்போதே செய்யவும் வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் உங்கள் குழந்தையோ, இளைய சமுதாயமோ உங்களிடம் ‘நீங்கள் நாடு இருந்த மீள முடியாத நிலையைக் கண்டீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து இருந்தீர்கள். ஏதாவது செய்தீர்களா?’ என்று கேட்கும்போது அந்தக் குழந்தையின் கண்களைப் பார்த்து, ‘ஆம். என்னால் இயன்ற அளவு செய்தேன். அதை உனக்காகச் செய்தேன்.’ என்று உங்களால் பதில் அளிக்க முடியும்.

முதன்முறையாக கண்ணாடி பிரதிபலிப்பு மூலம் சூரிய ஒளி


பசுமைநாயகன் Pasumai Nayagan
      செப்டம்பர் மாதங்களில் சூரிய ஒளியே கிடைக்காத நார்வேயின் ர்ஜுகன் பகுதியில் முதன்முறையாக கண்ணாடி பிரதிபலிப்பு மூலம் சூரிய ஒளி கொண்டு வரப்பட்டுள்ளது.
        ஜெர்மனில் உருவாக்கப்பட்ட கண்ணாடிகள் சூரிய ஒளியை பெற்று சுமார் 600 சதுர அடி பரப்பளவுக்கு பிரதிபலிக்கும்.சூரியனின் திசைக்கேற்ப தாமாகவே திரும்பும் 3 கண்ணாடிகள் மலை மீது பொருத்தப் பட்டுள்ளன.
.

எச்சரிக்கை..!


Pasumai Nayagan


      10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன்பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான். அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம போனது.அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.



      அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்றார் டாக்டர்,15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான். டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச்சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கு நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும்போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல்


கலந்திருக்கிறது.


     பழ வியாபரிக்கு இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார். இனி மேல் ரோடுகளில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண் பர்களே...எச்சரிக்கை

இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி





இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி

       க்கள் நகரங்களிலும், கிராமங்களிலும் வசிப்பார்கள். இன்னும் சிலர் காடுகளில் வசிப்பார்கள். அப்படியில்லாமல் கடலிலேயே வசிக்கும் மக்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கடல் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
     நிரந்தர இருப்பிடம் இல்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை நாடோடிகள் என்போம். ஆனால், மோக்கன் (MOKEN) என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் கடலிலேயே நாடோடிகளாக வாழ்கிறார்கள். இந்தப் பழங்குடியினர் கடலை விட்டு பிரிவதில்லை. எப்போதாவதுதான் நிலப் பகுதிக்கு வருவார்கள்.
    தாய்லாந்து, மியான்மார் போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் அந்தமானிலும் இந்த இனத்தவர் அதிகம் காணப்படுகின்றனர். கடலைப் பற்றியும், கடலில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தைப் பற்றியும் இவர்களிடத்தில் அபார அறிவு காணப்படுகிறது. சிறிய வலைகள், ஈட்டி போன்றவற்றை கொண்டு இந்த மோகென் மக்கள் கடல் வேட்டைக்கு செல்கின்றனர். தங்களுக்குத் தேவையான உணவபு பொருள் தவிர, பிற உட்கொள்ள முடியாத பிற பொருட்களை எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
 மோக்கன் மக்களின் முதல் எதிரி
     எந்த உபகரணத்தின் உதவியும் இன்றி, கடல் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை துல்லியமாக பார்க்கும் திறன் இந்த இனச் சிறுவர்களுக்கு கூட உண்டு.கபாங் எனப்படும் இவர்களே தயாரித்த படகுகளில் கடலை சுற்றியபடியே வாழ்ந்து வருகின்றனர். இந்தப் படகுகள் வெறும் போக்குவரத்துக்கு மட்டுமன்றி, பெரும்பாலான நேரங்களில் சமையலறையாகவும், படுக்கையறையாகவும் கூட மாறிவிடுகின்றன.
    2004ஆம் ஆண்டு சுனாமியில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தபோதும், கடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூடாக அறிந்த இந்த மோக்கன் மக்கள் தங்கள் உயிரை சுலபமாக காத்துக்கொண்டனர். நூற்றுக் கணக்கானோரை காப்பாற்றவும் செய்தனர். அதன் பிறகுதான் ஊடகங்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.
    இப்படி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி, எண்ணெய் எடுக்கும் திட்டங்கள்தான். கடலிலுள்ள எண்ணெய் வளங்களை எடுப்பதற்காக, அரசுகளும், நிறுவனங்களும் இவர்களை வலுக்கட்டாயமாக இடம் பெயரச் செய்கின்றன. மியான்மர் அரசு இவர்களை வெளியேற்ற ராணுவத்தைப் பயன்படுத்தியது. கடலோடு மட்டுமே வாழ தெரிந்த இந்த பழங்குடியினரை கட்டாயத்தின்பேரில் இயற்கையிடமிருந்து பிரிக்கும் முயற்சிகளுக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.