கொள்ளை போகும் கடல் மணல் பாதுகாக்கப்படுமா கனிம வளம்



திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திலும் கனிம வளம் மிக்க கடலோர மணல் விதிகளை மீறி அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ... விஞ்ஞானபூர்வமற்ற முறையில் இயந்திரங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் பாதிப்பு பலதரப்பிலும் இருப்பதாக கூறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
கடலின் நிறம் சிவப்பு.? தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் மணப்பாடு வரையிலான பகுதியில், சிவப்பு நிறத்திலேயே கடல் காட்சியளிக்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில், கடல் மணலில் ஏராளமான கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அவற்றை பிரித்தெடுப்பதற்காக தினசரி பல ஆயிரம் கிலோ மணல் கடலோரங்களில் இருந்து அள்ளப்படுகிறது. அவற்றில் இருந்து கனிமங்களைப் பிரிக்கும் போது அந்த மணல் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதோடு, பிரித்தெடுக்கப்பட்ட மணலை மீண்டும் கடலில் கலப்பதால் கடலின் நிறம் மாறுவதாக அப்பகுதி மீனவர்களும், பொது நல ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
"பலனளிக்காத நடவடிக்கைகள்":கடல் வளங்கள் மற்றும் கடற்கரைகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறினாலும், அவை நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
"அதிகாரிகள் அலட்சியம்"கடல் மாசடைவதால், அதனை நம்பியுள்ள கடல் வாழ் உயிரினங்களும், மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பொது நல ஆர்வலர்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
மன்னார் வளைகுடா பாதுகாக்கப்படுமா?அரிய கனிம வளங்களை உள்ளடக்கிய காரணத்திற்காக தொடர்ந்து சுரண்டப்படும் கடலோரப் பகுதிகளை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

                                     -பசுமை நாயகன்