கூடங்குளம்போராட்டத்திற்கு ஆதரவாக ராமேஸ்வரம் மீனவர்கள்

     ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தங்கச்சி மடம், பாம்பன் மீனவ பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்றிரவு நடந்தது. அதில், கூடங்குளம் போராட்டக் குழுவிற்கு ஆதரவாக, விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி, வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டத்தை எத்தனை நாட்கள் நீடிப்பது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படவுள்ளது.
-S.குருஜ