மீனவர்கள் உண்ணாவிரதம்

      கூடங்குளம் மீனவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்தும், அணுஉலையை மூட வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10-ம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 48 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள தேவாலயங்கள் அருகே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
மீனவர்களின் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தால், இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அணு உலையை மூடும் வரை கடலுக்குச் செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.