மானிய விலையில் டீசல் வழங்க மீனவர்கள் கோரிக்கை – ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம்

   மானிய விலை டீசல் வழங்கப்படாததால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.  இதனால் சுமார் 750 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 1500 லிட்டர் டீசலை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது.  இந்த, டீசல் அனைத்து ஊர்களிலும் வழங்கப்பட்டும் ராமேஸ்வரத்தில் மட்டும் இன்னமும் அளிக்கப்படவில்லை.  அந்தந்த மாதம் பயன்படுத்திக்கொள்ளாத டீசலை அடுத்த மாதம் சேர்த்தும் பெறமுடியாத கட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த மாதத்திற்கான டீசல் இதுவரை வழங்கப்படாதது தங்கள் தொழிலை பெரிதும் பாதித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் 900 படகுகள் கடலுக்குள் செல்லும் நிலையில்,  இன்று 120 படகுகள் மட்டுமே மீன் பிடிக்கச் சென்றுள்ளன.  மீதி படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
-S.குருஜி