கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

         கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர். புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
இதில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
-S.குருஜி