கேரளாவில் தலாய் லாமா

        ல்லெண்ண அடிப்படையில் திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமா கேரளா வந்துள்ளார்.
கேரளாவில் ஸ்ரீநாராயண குரு ஆசிரமத்தில் தலாய் லாமாவுக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன. பின்னர் அவர், திருவனந்தபுரம் அருகே சிவகிரியில் உள்ள ஸ்ரீநாராயண குரு தீர்த்தாரதனா விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சில நாடுகளில் உள்நாட்டு கலவரத்தில் உயிரிழப்புகள் நிகழ்வது மனித குலத்திற்கு நல்லதல்ல என்று குறிப்பிட்ட தலாய் லாமா, உலக நாடுகள் மத்தியில், சகோதரத்துவம் அன்பு, அமைதி ஆகியவற்றை பரப்புவதில் இந்தியா முக்கிய நாடாக திகழ்கிறது என்று கூறினார். இன்று கேரளாவில் வாழும் திபெத்தியர்களை சந்திக்கும் தலாய் லாமா பின்னர், கிறிஸ்துவ மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.