கன்னியாகுமரியில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பு


   ன்னியாகுமரி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் தெருநாய்களுக்கு இனவிருத்தி தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வெறிநாய்க்கடி தொல்லை அதிகரித்துள்ளதாக குழித்துறையில் பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டனர்.இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட தெருநாய்கள் இனவிருத்தி தடை அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்காக குழித்துறை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனிடையே தெருநாய்களை பிடிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது. மேலும் தங்களுக்கான கூலித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று நாய் பிடிக்கும் கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விஸ்வநாதன்