நாகர்கோவில் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்


நாகர்கோவில் அருகே கோட்டாறில் பகல் நேரங்களில் லாரிகள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததாக கூறி, போராட்டக்காரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இரவு நேரங்களில் மட்டும் லாரிகள் அனுமதிக்கப்பட்டு, பொருட்கள் இறக்கப்படுவதால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
பகல் நேரங்களில் நகர்ப்புறத்தில் லாரிகள் நுழைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி காவல் துறையினர் லாரிகள் நுழைய அனுமதி மறுத்து வருகின்றனர்