தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.. இது ஒருபுறம் இருக்க....தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட ஒரே காரணம் மீன் வளம்தான்.
இலங்கை உள்நாட்டுப்போரின் இறுதி யுத்தம் முடியும் வரை இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள குறுகிய கடல்பரப்பில் தமிழக மீனவர்களே அதிக அளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 2009 ஆண்டு இறுதி யுத்தம் முடிந்த நிலையில், இப்போது இலங்கை தமிழ் மீனவர்களும் மீன்பிடிக்க வருகிறார்கள்.. இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்கக்கூடிய சூழல் உருவாகி இருக்கும் நிலையில், இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பதில் மோதல் எழுகிறது.
தமிழக மீனவர்களை பொறுத்தவரையில் நவீனமான தொழில்நுட்பங்களுடன் மீன்பிடித்து வருகிறார்கள்.. ஆனால் இலங்கைத் தமிழ் மீனவர்களோ கரையை ஒட்டியே மீன்பிடித்து வருகிறார்கள்.. தமிழக மீனவர்களின் டிராலர்கள் வலைகளை அறுத்துவிடுவதாக கூறுகிறார்கள் இலங்கை மீனவர்கள்.. இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே தீர்க்கப்படாத விவகாரங்கள் இன்னமும் நீடித்து வருகின்றன.
இருதரப்பு மீனவர்களில் தமிழக மீனவர்கள், உடனடி தீர்வை எதிர்பார்க்கிறார்கள்.ஏனெனில் தமிழக மீனவர்கள்தான், இலங்கையின் நேரடித் தாக்குதல்களுக்கு அடிக்கடி உள்ளாகிறார்கள்.. இதனால், இரு நாடுகளும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் இருநாட்டு மீனவர்களும்.